திருநங்கை ஒருவர் பெண்ணாக மாற, சுயமாக தன்னுடைய ஆணுறுப்பை அறுத்தெடுத்ததில் பரிதாபமாக உயிரிழந்ததில் மிரண்டுபோயிருக்கிறது திருநங்கைகளின் உலகம்.

தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம், அருகேயுள்ள அரசர்குளத்தைச் சேர்ந்தவர் 35 வயதான சிவாஜி கணேசன் என்ற சைலு. ஆணாகப் பிறந்து, பெண்மைக்குரிய உணர்வுகள் இருந்ததன் காரணமாக திருநங்கையாக மாறினார். பின்னர், தென்காசி மாவட்டத்தின் கடையத்திலிருந்த மகாலட்சுமி என்ற திருநங்கையைச் சந்தித்தார். ஆலங்குளத்தில் அவருடன் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தங்கியிருந்தார். இவர்களுடன் சேர்ந்து சுமார் 20 திருநங்கைகள் வரை ஒன்றாக இருந்திருக்கின்றனர்.

eee

பகலில் தொழில் நிமித்தம் வெளியே செல்பவர்கள் மாலைக்குள் திரும்பிவிடுவது வழக்கமாம். உணர்வால் பெண்ணாயிருந்தாலும், உடலளவிலும் தன்னை பெண்ணாக மாற்றிக் கொள்ள விரும்பியிருக்கிறார். இப்படியிருக்கையில், கடந்த மார்ச் 6ஆம் தேதியன்று சைலு மர்மமாக இறந்ததாக ஆலங்குளம் அரசு மருத்துவமனையிலிருந்து கடையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.

கடையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டரான மேரி ஜெமீதா தலைமையிலான போலீசார் நேரில் சென்று ஆய்வுசெய்ததில், சைலுவின் ஆணுறுப்பு அறுபட்ட நிலையில், ரத்தம் பெருக் கெடுத்து வெளியேறியதால் உயிரிழந்தது தெரியவந்திருக்கிறது. சைலுவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்விற்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

Advertisment

போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில், சைலு பெண்ணாக மாறுவதற்காகத் தனக்குத்தானே சுயமாக ஆணுறுப்பை அறுத்திருக்கிறார். அதில் ரத்தம் முழுவதும் வெளியேறியதால் இறந்துவிட்டதாக, அவரை மருத்துவமனைக்கு கொண்டுவந்த திருநங்கைகள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனாலும் போலீசாரின் சில சந்தேகங்கள் தீராததால், உடன்வந்த திருநங்கைகளான மகாலட்சுமி, மதுமிதா இருவரிடமும் நெருக்கிப்பிடித்து விசா ரித்ததில் அதிர்ச்சிகரமான விஷயங்கள் தெரியவந்தி ருக்கின்றன. "எங்களோ டிருந்த சைலு உடலள விலும் பெண்ணைப்போல் மாறவேண்டுமென விரும் பியதால், அறுவைச்சிகிச் சையால் தனது ஆணுறுப்பை அகற்ற முடிவெடுத்தார். ஆனால் மருத்துவமனையில் முறையான சிகிச்சையெடுக் காமல், தானாகவே அதை அறுத்தெடுக்க முடிவெடுத் தார். அதை எங்களிடமும் தெரிவித்தார். அதன்படி மார்ச் 6ஆம் தேதி, புதன்கிழமையன்று, அவரது ஆணுறுப்பை அறுத்தெடுப்பதற்கு நாங்களும் உதவிசெய்ய, கூரான ஆயுதத்தால் ஆணுறுப்பை அறுத்த போது, ரத்தம் குபுகுபுவென்று பெருக்கெடுத்து ஓடியது. சைலு சிறிதுநேரத்தில் மயங்கியதால், எங்களுக்கு பயமாகி, அவரை சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோகும்போதே உயிர் பிரிஞ்சிடுச்சு'' என்று உடனிருந்த இரு திருநங்கைகளும் தெரிவிக்க, போலீசாருக்கு வியர்த்துவிட்டதாம். இப்படியொரு பயங்கரமா என்று திகைத்திருக்கிறார்கள். அதையடுத்து, அஜாக்கிரதையாகச் செயல்பட்டதற்காகவும், குற்றத்தை மறைத்ததற்காகவும் மகாலட்சுமி, மதுமிதா இருவரும் கைது செய்யப்பட்டி ருக்கிறார்கள்.

மேலும் இதுகுறித்து நாம் விரிவாக விசாரித்ததில், ஏற்கெனவே இதுபோன்று பாலினம் மாறுவதற்காக ஆணுறுப்பை அறுத்தெடுக்கும் சிகிச்சை பிற திருநங்கைகளுக்கும் செய்யப்பட்டுள்ளதாம். அப்படி செய்யப்பட்டபோது ஏற்பட்ட காயங்களுக்கு, மருத்துவம் தெரிந்த, ஆனால் முறையாக அங்கீகரிக்கப்படாத நபர்களிடம் சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறார்களாம். இதுபோன்று ஆணுறுப்பு அறுக்கும் சிகிச்சை களை சுயமாகச் செய்து வருவது, இதுவரை பெரிய அளவில் பிரச்சனையாகாததால் வெளித்தெரியாமல் இருந்திருக்கிறதாம். தற்போது உயிரிழப்பு வரை ஆனதால் தான் வெளியே தெரியவந்திருக் கிறதாம்.

Advertisment

சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீதா கூறுகையில், "ஆணுறுப்பு அறுப்பு சிகிச்சை சம்பவத்தில இவங்க ரெண்டு பேரும் கூடச் சேர்ந்துதான் செஞ்சிருக்காங்க. இது மாதிரி மத்த திருநங்கைகளுக்கும் செஞ்சதா சொல்றாங்க. விசாரிச்சிட்டிருக்கோம். ரெண்டுபேர் மீதும் வழக்குப் போடப்பட்டு கைது பண்ணிருக் கோம்'' என்றார்.

பாலின மாற்றலுக்காக ஆணுறுப்பை சுயமான வழியில் மிகக்கொடூரமாக அறுத்தெடுக்கும் முறை குறித்து அறுவை சிகிச்சை மருத்துவரிடம் கேட்டபோது, "இந்த மாதிரியான உறுப்பு அறுப்பு சிகிச்சை சம்பவங்களுக்கு போதுமான விழிப்புணர்வு இன்மையே காரணம். அதனால்தான் அவர்க ளாகவே ஆணுறுப்பு அறுப்பு சிகிச்சையை நடத்தியிருக்கிறார்கள். கேட்பதற்கே பயங்கர மாயிருக்கு. ஆணுறுப்புல ரத்த ஓட்டமிருக்கும். அத இவங்க அப்டி அறுக்குறப்ப ரத்தம் முழுவதும் வெளியேறுவதால் இறுதியில் மரணம்தான் ஏற்படும். தற்போது இப்படியான சிகிச்சைக்கு முறையான பிளாஸ்டிக் சர்ஜரியெல்லாம் வந்தாச்சு. அதற்கெல்லாம் துறை ரீதியா முறையான அனுமதி பெற்ற பின்பே இந்த சர்ஜரிகள் நடத்தப்படுகின்றன. ஆண்குறி கொண்ட ஒருவருக்கு பெண் தன்மை கொண்ட ஹார்மோன்களிருக்கும். பலகட்ட டெஸ்ட்களுக்குப் பின்பு அவங்களுக்குரிய ஆண் தன்மையுடைய ஹார் மோன்களைக் குறைச்சி, அதன்பிறகு பிளாஸ்டிக் சர்ஜரிகள் நடத்தப்படுகின்றன'' என்றார் விரிவாக.

சுயமான மருத்துவச் சிகிச்சைகள் எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்த விழிப்புணர்வை திருநங்கைகளுக்கு ஏற்படுத்தவேண்டியது அரசாங்கம் மற்றும் சமூகநல அமைப்பு களின் கடமை.

-ப.இராம்குமார்